ஃபிக்ஹ் பாகம் – 3
சுன்னத்தான தொழுகைகள்
சுன்னத்தான தொழுகைகளை இரண்டாக பிரிக்கலாம்
❤ கடமையான தொழுகையுடன் சம்மந்தப்பட்ட சுன்னத்துகள் (முன் பின் சுன்னத்துகள் )
❤ கடமையான தொழுகையுடன் சம்மந்தப்படாத சுன்னத்துகள் (லுஹா, வித்ரு, தஹஜ்ஜுத், போன்றவை)
கடமையான தொழுகையுடன் சம்மந்தப்பட்ட சுன்னத்தை இரண்டாக பிரிக்கலாம்
سَنَةٌ المُؤَكَّدَة ↔ வலியுறுத்தப்பட்ட சுன்னத்
(ரவாதிப் سنن رواتب )
سَنَةٌ غَيْرُ مُؤَكَّدَة ↔ வலியுறுத்தப்படாத சுன்னத்
(السنن غير الرواتب)
வலியுறுத்தப்பட்ட சுன்னத் ↔سَنَةٌ المُؤَكَّدَةُ
உம்மு ஹபீபா (ரலி) -நபி (ஸல்) – யார் ஒருவர் ஒரு இரவிலும் பகலிலும் (சுன்னத்தான )12 ரக்காத் தொழுகிறாரோ அவருக்கு சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும்.
- லுஹருக்கு முன்னால் 4 பின்னால் 2,
- மஃரிபிற்கு பின் 2,
- இஷாக்கு பிறகு 2,
- ஃபஜ்ருக்கு முன்னால் 2.
நபி (ஸல்) விடமிருந்து இதை கேட்ட நாள் முதல் இதை நான் விட்டதே இல்லை (சுனன் திர்மிதி- ஹசன் ஸஹீஹ், ஸஹீஹ் முஸ்லீம்).