Home / Non Muslim program / கேள்வி எண்: 36. சொத்து, திருமணம், விவாகரத்து போன்ற விவகாரங்களில் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தங்களுக்கென தனியான சட்டங்கள் வைத்திருக்கும் போது, குற்றவியல் சட்டங்களிலும் இஸ்லாமியர்கள் இஸ்லாமிய சட்டத் திட்டங்களை அமல் செய்ய வேண்டியது தானே?. (உதாரணத்திற்கு திருடினால் கையை வெட்டுவது போன்றது..)

கேள்வி எண்: 36. சொத்து, திருமணம், விவாகரத்து போன்ற விவகாரங்களில் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தங்களுக்கென தனியான சட்டங்கள் வைத்திருக்கும் போது, குற்றவியல் சட்டங்களிலும் இஸ்லாமியர்கள் இஸ்லாமிய சட்டத் திட்டங்களை அமல் செய்ய வேண்டியது தானே?. (உதாரணத்திற்கு திருடினால் கையை வெட்டுவது போன்றது..)

கேள்வி எண்: 8.

சொத்து,  திருமணம்,  விவாகரத்து போன்ற விவகாரங்களில் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தங்களுக்கென தனியான சட்டங்கள் வைத்திருக்கும் போது,  குற்றவியல் சட்டங்களிலும் இஸ்லாமியர்கள் இஸ்லாமிய சட்டத் திட்டங்களை அமல் செய்ய வேண்டியது தானே?. (உதாரணத்திற்கு திருடினால் கையை வெட்டுவது போன்றது..)

 

பதில்:

1. இஸ்லாமிய தனியார் சட்டம்:

தனியார்சட்டம் என்பது ஒரு தனிப்பட்ட மனிதருக்கும், அவருக்கு நெருங்கிய பந்தம் உடையவர்களுக்கும் – இடையில் ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பதற்கு ஏற்படுத்தப்பட்டதாகும்.

உதாரணத்திற்கு திருமணம் சம்பந்தப்பட்ட சட்டங்கள், விவாகரத்து சம்பந்தப்பட்ட சட்டங்கள், சொத்து விவகாரங்கள் போன்றவை. மேற்படி சட்டங்கள் ஒரு குறிப்பிட்ட குழுவினாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் இருக்க வேண்டும். மேற்படி சட்டங்கள் முழு சமுதாயத்தையும் நேரடியாக பாதிக்கக் கூடிய செயலாகவோ அல்லது குற்றவியல் சம்பந்தப் பட்டதாகவோ இருக்கக் கூடாது.

 

2. இந்தியா ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயக நாடு.

எந்த ஒரு நாடானாலும், தனியார் சட்டம் என்பது, ஒவ்வொரு சமுதாய மக்களுக்கிடையேயும், ஒவ்வொரு குழுவுக்கும் இடையேயும் வேறுபடலாம். இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடாக இருப்பதால் – ஒவ்வொரு சமுதாயமும் – அவர்கள் விரும்பும் பட்சத்தில் – அவர்கள் விரும்பும் தனியார் சட்டத்தை பின்பற்ற – இந்தியாவின் சிவில் உரிமைச் சட்டம் அனுமதியளித்துள்ளது.

 

3. இஸ்லாமிய தனியார் சட்டமே மிகச் சிறந்த தனியார் சட்டம்:

உலகத்தில் உள்ள விதவிதமான தனியார் சட்டங்களில் – மிகச் சிறந்ததும், பலனைத் தரக்கூடியதுமான தனியார் சட்டம் – இஸ்லாமிய தனியார் சட்டமே என்கிற நம்பிக்கை இஸலாமியர்களிடையே உள்ளது. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் – இஸ்லாமிய தனியார் சட்டத்தை பின்பற்றுவதற்கு, அவர்கள் இஸ்லாத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் காரணமாகும்.

 

4. குற்றவியல் சட்டம்:

குற்றவியல் சட்டம் என்பது சமுதாயத்தை நேரடியாகப் பாதிக்கக் கூடிய ஒரு செயல் அல்லது குற்றம் சம்பந்தப்பட்டது ஆகும். உதாரணத்திற்கு கொலை, கொள்ளை, வல்லுறவு(கற்பழிப்பு) போன்றவையாகும்.

 

5. குற்றவியல் சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்.

எந்த நாடாக இருந்தாலும், குற்றவியல் சட்டமானது, வித்தியாசமான பல சமுதாயத்திற்கு பல விதமான சட்டம் என்னும் தனியார் சட்டம் போலில்லாமல், எந்த சமுதாயமாக இருந்தாலும் அல்லது சமுதாயத்தின் எந்த குழுவாக இருந்தாலும் குற்றவியல் சட்டம் என்பது சமுதாயத்தில் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு மனிதன் திருடினால் அவனது கையை வெட்டுமாறு பணிக்கிறது இஸ்லாமிய குற்றவியல் சட்டம். ஆனால் மேற்படி சட்டம் இந்து குற்றவியல் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. உதாரணத்திற்கு சமுதாயத்தில் உள்ள ஒரு இந்து, ஒரு இஸ்லாமியரிடம் திருடி விட்டார் எனில், அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய தண்டனை என்ன?.

இஸ்லாமியர் இஸ்லாமிய குற்றவியல் சட்டப்படி திருடியவரின் கை வெட்டப்பட வேண்டும் என்பதை விரும்புகிறார் எனில், இந்து குற்றவியல் சட்டம் அதை அனுமதிப்பதில்லை.

 

6. இந்தியாவில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களை உட்படுத்தாமல், இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மாத்திரம், தனிப்பட்ட முறையில் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை பின்பற்ற முடியாது.

ஒரு முஸ்ஸிம் அவரைப் பொருத்த மட்டில், அவர் செய்துவிட்ட குற்றத்திற்கு தண்டனையாக – இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின்படி, தண்டனை பெற விரும்புவார் எனில் – அது நடைமுறையில் சாத்தியக் கூறானதல்ல. ஒரு முஸ்லிம் கொள்ளையடித்து விட்டதாக குற்றம் சாட்டுப்படுவார் எனில் -அந்த குற்றச்சாட்டின் சாட்சி முஸ்லிம் அல்லாதவராக இருப்பார் எனில், முஸ்லிமும், முஸ்லிம் அல்லாதவரும், தத்தம் குற்றவியல் சட்டத்தை பயன்படுத்த விரும்பினார்கள் எனில் – இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின் படி பொய் சாட்சியம் சொன்னவருக்கு 80 கசையடிகள் கொடுக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் இந்திய குற்றவியல் சட்டப்படி பொய் சாட்சி சொல்பவர் தண்டனையிலிருந்து எளிதாக தப்பிவிட முடியும். இவ்வாறாக ஒரு முஸ்லிமும் – ஒரு முஸ்லிம் அல்லாதவரும் தத்தம் குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பினால் – முஸ்லிம் அல்லாத ஒருவர் – குற்றம் செய்யாத முஸ்லிம் ஒருவரை, எளிதாக குற்றவாளி ஆக்கிவிட முடியும். எப்படி இருப்பினும், இரண்டு பேருமே இந்திய குற்றவியல் சட்டத்தை பின்பற்றுவார்கள் எனில் – இந்திய குற்றவியல் சட்டத்தின்படி கொள்ளை அடிப்பவருக்கும், பொய்சாட்சியம் சொல்பவருக்கும் தண்டனை அத்தனை கடுமையானதாக இல்லை. இவ்வாறு கடுமையான தண்டனை இல்லாத சட்டம் கொள்ளை அடிப்பவனை தங்களது சுய லாபத்திற்காக மேலும் கொள்ளை அடிக்கச் செய்யத் தூண்டவும், பொய்சாட்சியம் சொல்பவனை மேலும் பொய்சாட்சியம் சொல்ல வைக்கவும் காரணமாக அமைந்துள்ளது.

 

7. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள், இந்தியர்கள் அனைவர் மீதும் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் நடைமுறைபடுத்தப் படுவதைத்தான் விரும்புவார்கள்.

முஸ்லிம்கள் என்கிற முறையில் இந்தியாவிலும் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் நடைமுறைபடுத்தப் படுவதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில் – திருடினால் கையை வெட்டுவது என்கிற இஸ்லாமிய குற்றவியல் சட்டம் – கண்டிப்பாக திருட்டின் சதவீதத்தை குறைக்கும். அதுபோல பொய் சாட்சியம் சொல்பவருக்கு 80 கசையடிகள் என்கிற சட்டம் – ஒரு மனிதன் பொய் சாட்சியம் சொல்வதை கண்டிப்பாக தடுக்கும்.

 

8. இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப் படுவதற்கு மிகவும் எனிதானது:

இஸ்லாம் ஒரு குற்றத்திற்கு தண்டனை வழங்குவதோடு நின்று விடாமல், அந்த குற்றம் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான வழிமுறைகளையும் காட்டித் தருகிறது. உதாரணத்திற்கு திருடினால் கையை வெட்டுவது, வல்லுறவு கொள்பவனுக்கு மரண தண்டனை போன்றவை, அதுபோன்ற குற்றங்களை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைகிறது. அதுபோன்ற

குற்றங்களை செய்ய நினைப்பவனை – பல நூறுமுறை – சிந்திக்க வைக்கிறது இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள்.

இவ்வாறு இந்தியாவில் குற்றங்கள் குறைக்கப்பட வேண்டும் அல்லது குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்று எண்ணிணால் -இந்தியாவில் பொது இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை – நடைமுறை படுத்துவதே சிறந்த வழிமுறையாகும்.

Check Also

உருவமுள்ள பொம்மைகளை வீட்டில் அனுமதிக்கலாமா?| கேள்வி பதில் |

உருவமுள்ள பொம்மைகளை வீட்டில் அனுமதிக்கலாமா? அஷ்ஷேக் ரம்ஸான் பாரிஸ் (மதனி) சிறப்பு மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி உருவமுள்ள பொம்மைகளை …

Leave a Reply