கேள்வி எண்: 15
‘காஃபீர்‘ என்று அழைத்து மாற்று மதத்தவர்களை, முஸ்லிம்கள் அவமதிப்பது ஏன்?.
பதில்:
‘காஃபீர்’ என்றால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர் என்று பொருள்:’காஃபீர்’ என்கிற அரபு வார்த்தை ”குஃப்ர்’ என்கிற அரபு மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.’குஃப்ர்’ என்கிற அரபு வார்த்தைக்கு நிராகரித்தல் அல்லது உண்மையை மறைத்தல் என்று பொருள்.இஸ்லாமிய கலைச்சொல் களஞ்சியத்தின்படி மேற்படி வார்த்தைக்கு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாதவர் அல்லது இஸ்லாம் பற்றிய உண்மைகளை மறைப்பவர் என்று பொருள் உண்டு.அதனை தமிழ் மொழியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர் என்று பொருள் கொள்ளலாம்.
மாற்று மதத்தவர்களே! ”காஃபீர்’ என்ற நீங்கள் அழைக்கப்படுவது உங்களை புண்படுத்துவதாக கருதினால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களை எவரும் ”காஃபீர்’ (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்) என்று அழைக்க மாட்டார்கள்.