Home / Tafseer / குர்ஆன் தப்ஸீர் / குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 28

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 28

قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَهْلَكَنِيَ اللَّـهُ وَمَن مَّعِيَ أَوْ رَحِمَنَا فَمَن يُجِيرُ الْكَافِرِينَ مِنْ عَذَابٍ أَلِيمٍ ﴿٢٨
 
(என்னையும் என்னுடன் உள்ளவர்களையும் அல்லாஹ் அழித்தால் அல்லது எங்களுக்கு அருள் புரிந்தால் துன்புறுத்தும் வேதனையிலிருந்து (ஏக இறைவனை) மறுப்போரைக் காப்பவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! என்றும் கூறுவீராக!). அல்முல்க் – 28
அல்லாஹ்வின்; அருட்கொடைகளை நிராகரிக்கும் அந்த முஷ்ரிக்கீன்களுக்கு முஹம்மதே நீர் கூறுவீராக! அல்லாஹ்வின் வேதனையிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதற்கான வழி பாவமன்னிப்புத் தேடி அவனது மார்க்கத்தின்பால் மீள்வதாகும். எமக்கு வேதனை வர வேண்டுமென நீங்கள் ஆசைவைப்பது உங்களுக்கு எப்பயனையும் அளிக்காது. அல்லாஹ் எம்மை வேதனை செய்தாலும் அல்லது எமக்கு அருள் புரிந்தாலும் அது உங்களுக்கு வரவிருக்கும் நோவினை தரும் வேதனையிலிருந்து உங்களைப் பாதுகாக்கமாட்டாது.

Check Also

தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ்| பாகம் 68 |الحديث المقطوع அல் ஹதீஸ் அல் மக்தூஃ

அஷ்ஷேக் கலாநிதி ரிஷாத் ரியாதி (PhD) தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ் | பாகம் 68 | الحديث المقطوع அல் …

Leave a Reply