حلية طالب العلم
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்
பாகம் – 9
ازهد في الدنيا يحبك الله، وازهد فيما عند الناس يحبك الناس 
சஹல் இப்னு சஹத் அஸ் ஸாஹிதீ (ரலி) – நபி (ஸல்) – உலக விஷயத்தில் பற்றின்றி இருங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான். மக்கள் மத்தியிலுள்ள பொருட்கள் மீது ஆசை கொள்ளாமலிருந்தால் மக்கள் உங்களை நேசிப்பார்கள்.(இப்னு மாஜா – ஹஸன்)
இப்னு ஒதைமீன் (ரஹ்) – உபகாரத்தை அடிப்படையில் தண்ணீர் தந்தாலும் அதை பெறக்கூடாது அதற்கு பதிலாக தயம்மும் செய்து கொள்ளலாம். பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி உளூ செய்வதே மேலானதாகும்
ஸூரத்துஜ்ஜுமர் 39:9
هَلْ يَسْتَوِى الَّذِيْنَ يَعْلَمُوْنَ وَالَّذِيْنَ لَا يَعْلَمُوْنَؕ
…அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா?…..
ஸூரத்துல் முஜாதலா 58:11
يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ ؕ
…உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் …
مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ 
முஆவியா (ரலி) – நபி (ஸல்) – யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் தெளிவைக்கொடுக்கிறான் (புஹாரி, முஸ்லீம்)
நாம் அதிகமதிகமாக கல்வியை தேடும்போதும், புத்தகங்களை வாசிக்கும்போதும், புத்தகம் வாசிப்பவர்களுடன் பழங்கும்போதும் தான்; நமக்கு முன் சென்ற அறிஞர் பெருமக்களின் மிகப்பெரும் பணிகளை நம்மால் விளங்கிக்கொள்ள முடியும்.
இமாம் ஷுஹ்பீ (ரஹ்) நீங்கள் எந்த ஒரு மார்க்கக்கல்வியை கேட்டாலும் எழுதுங்கள் எழுத வசதி இல்லையேல் பக்கத்தில் உள்ள சுவற்றிலாவது எழுதுங்கள் என வலியுறுத்தினார்கள்.
முன் சென்ற அறிஞர்கள் எழுதும் அடிக்குறிப்புகள் கூட பிறருக்கு புரியும் விதத்தில் இருந்தது. அவர்களது அடிக்குறிப்புக்களால் முக்கிய குறிப்புக்கு எந்த பாதிப்பும் இல்லாதவாறு இரண்டையும் பிரித்து சீராக எழுதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.