حلية طالب العلم
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்
பாகம் – 6
- அறிஞர் பெருமக்கள் ஆசிரியர்களை மிக அதிகமாக மதிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். மிக்க ஒழுக்கத்துடன் நடந்து கொண்டனர்.
- இம்மை மறுமையின் வெற்றி கல்வியின் மூலம் தான் என்றும் தரமான கல்வி என்பது நல்ல ஆசிரியரிடமிருந்து ஒழுக்கத்துடன் கற்றாலே கற்க முடியும் என்றும் விளங்கியிருந்தார்கள்.
- ஆசிரியர்களிடமுள்ள நல்லொழுக்கங்களை எடுத்துக்கொள்வார்கள்.
- முன்சென்ற உலமாக்கள் தங்களது ஆசிரியர்களை எவ்விதத்திலும் கிண்டல் கேலிகள் செய்வதோ அவமதிப்பதோ செய்ததில்லை.
- மரியாதையில் ஷிர்க் குஃப்ர் கலக்காமல் கவனமாக இருந்தார்கள்.