حلية طالب العلم
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்
பாகம் – 23
கல்வியில் பகட்டுத்தன்மை கூடாது:-
⚜ ஆசிரியரை விட தான் சிறந்தவன் என்று நிரூபிக்க முனைவது.
⚜ எழுத்தின் மூலம் மக்களுக்கு அழைப்புப்பணி செய்பவர்கள் அந்த துறையைப்பற்றி முழுமையாக படித்துவிட்டு அதை எளிய முறையில் மக்களுக்கு எடுத்துச்செல்லலாம்.
⚜ இமாம் கத்தீப் அல் பக்தாதீ கூறுகிறார்கள்:- ஒருவர் ஒரு புத்தகத்தை தொகுத்தால் அவர் அந்த புத்தகத்தை முன்வைக்கவில்லை அவர் தனது அறிவை முன்வைக்கிறார்.
⚜ கல்வியில் சிறுபுத்தி அல்லது குறும்புத்தி உடையவர்கள் சமகாலத்து இமாம்களின் பதிவுகளை மக்கள் முன்னிலையில் கேவலப்படுத்துவது மிக மோசமான செயலாகும். அந்த புத்தகத்தின் மூலமாக மக்களில் எவரேனும் தவறு செய்வதை கண்டால் அந்த தவறை சுட்டிக்காட்டி தெளிவு படுத்தலாம் ஆயினும் இழிவு படுத்தும் நோக்கத்தோடு புத்தகங்களை விமர்சித்தல் கூடாது.
⚜ புத்தக ஆசிரியர் – நம்முடைய உள்ளத்தை கண்ணாடி குவளை போல் தெளிவாக வைத்திருக்க வேண்டும்.
⚜ இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களின் மாணவர்களுக்கு செய்த உபதேசம் – உங்கள் உள்ளத்தை பஞ்சு போல் ஆக்காதீர்கள். பஞ்சு நல்லதையும் கெட்டதையும் அனைத்தையும் உரிந்து கொள்ளும். தேவையில்லாத விஷயங்களை உள்வாங்கும்போது மனதில் ஏற்படும் சந்தேகங்கள் மூலமாக ஈமான் பலகீனமாகிறது.
⚜ அரபியில் நஹு – ஸர்ஃபில் தவறுகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
⚜ உமர் (ரலி) – அரபி மொழியை கற்றுக்கொள்ளுங்கள் ஏனெனில் அது உங்களுக்கு பல நல்ல ஒழுக்கங்களை அதிகரிக்கச்செய்யும்.
⚜ முன் சென்ற இமாம்கள் தங்கள் மாணவர்கள் அரபு இலக்கணங்களில் தவறிழைத்தால் மிக கடுமையாக நடந்து கொண்டார்கள் என அறிய முடிகிறது.