حلية طالب العلم
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்
பாகம் – 21
புத்தகங்களை 3 வகையாக பிரிக்கலாம்
- நல்ல புத்தகம்
- தீய புத்தகம்
- பயனோ தீமையோ அற்ற புத்தகம்.
இதில் இம்மை மறுமை பயனுள்ள புத்தகங்களை நாம் உபயோகித்தல் வேண்டும்.
ஒரு புத்தகம் வாசிப்பதற்கு முன் அது எந்த துறையைச் சார்ந்த புத்தகம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த புத்தகத்திலுள்ள கலைச்சொற்களை அறிந்து கொள்ள வேண்டும்
புத்தக ஆசிரியரின் எழுத்து போக்கை தெரிந்து கொள்ள வேணடும்
அடிக்குறிப்புகள் எழுதும் பழக்கங்கள் வளர்ப்பது நல்லது
தான் படிப்பதை சுருக்கமாக அமைக்க வேண்டும்
எந்த ஒரு புதிய புத்தகம் வாங்கினாலும் அதன் முன்னுரையேனும் வாசித்து விட்டு எடுத்துவைத்தல் சிறந்தது
குறிப்புகளை தெளிவாகவும் எழுத்துக்களுக்குள்ள சட்டதிட்டங்களை தெரிந்து எழுத வேண்டும்.