حلية طالب العلم
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்
பாகம் – 2
مراقبه النفس
தன்னுடைய ஆத்மாவை தானே கண்காணிப்பது
பிறரை கண்காணிப்பதை நிறுத்திவிட்டு நம்மை நாமே கண்காணித்துக்கொள்ளுதல் ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்விலும் அவசியமான ஒன்றாக இருக்கிறது
நம்மை பரிசோதிக்க வேண்டிய விஷயங்கள்:
- நம்மிடம் خشية الله இறையச்சம் இருக்கிறதா என்று நாம் சோதித்து பார்க்க வேண்டும்.
- நம்முடைய عمل அமல்களை சரியான முறையில் செய்து வருகிறோமா என்று பரிசோதிக்க வேண்டும்.
- போதும் என்ற தன்மை(القناعة)
நபி (ஸல்) – செல்வம் என்பது போதும் என்ற தன்மையே கல்விக்கு மிகவும் இடைஞ்சலாக இருக்கும் விஷயம் போதும் என்ற தன்மையில்லாமல் பிறருடன் நம்மை நாம் உலகவிஷயங்களில் ஒப்பிடுவதே.
- நாம் அதிகமாக கல்விகற்றவரைப்போல காண்பித்துக்கொள்ளக்கூடாது. தெரியாத விஷயங்களை தெரியாது என்று கூறும் தைரியம் வேண்டும்.
உமர் (ரலி) – தன்னிடம் இல்லாததை உள்ளது போல காண்பிப்பவனுக்கு அல்லாஹ் போதுமானவன்(புரியவைப்பான்)
இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகளுக்கு “எனக்கு விடை தெரியாது” என்று பதிலளித்தவராவார். அவர் தம்முடைய மரணத்தருவாயில் “நான் அளித்த தீர்ப்புக்களில் எனது சொந்தக்கருத்தை மிகைப்படுத்தி எங்கேனும் கூறிவிட்டேனோ” என்று அஞ்சி கூறினார்கள்.