حلية طالب العلم
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்
பாகம் – 18
💕புத்தக ஆசிரியர் கல்விக்கும் ஸகாத் உண்டு என சில கருத்துக்களை கூறுகிறார்கள்
- சத்தியத்தை உடைத்து கூற வேண்டும். சத்தியத்தை மறைத்து சமாதானமாக போவது கல்விக்கு நாம் செய்யும் மோசடியாகும்.
- நன்மையை ஏவ வேண்டும்(அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்மிடம் இட்ட கட்டளைகள்)
- தீமையை தடுக்க வேண்டும் (அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்மிடம் விலக்கியவைகள்). நன்மையையும் தீமையையும் பிரித்தறியும் அறிவை பெற்றவர்களாக நாம் இருக்க வேண்டும்
- கற்ற கல்வியை பரப்ப வேண்டும்
- அதன் மூலம் மக்கள் பயன் பெறுவதை விரும்ப வேண்டும்
- கல்வி கற்பதால் கிடைக்கும் பதவிகளை மக்களுக்கு பயன் தரும் விதத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.