ஃபிக்ஹ் பாகம் – 11
கடமையான குளிப்பு
الغسل குளிப்பு
அஸ்மா பின்த் யஸீத் (ரலி)-நபி (ஸல்) விடம் மாதவிடாய் பெண்கள் எப்படி சுத்தப்படுத்த வேண்டும் என்று கேட்டபோது இலந்தயிலை கலந்த தண்ணீரால் குளித்துவிட்டு மாதவிடாயின் இடத்தை கஸ்தூரியால் சுத்தப்படுத்துங்கள்-எவ்வாறு சுத்தப்படுத்துவது என்று கேட்டபோது- சுப்ஹானல்லாஹ் என்று நபி (ஸல்) சொன்னதும் ஆயிஷா (ரலி) ஒரு பஞ்சால் வாசனை திரவத்தை நனைத்து இரத்தம் வந்த இடத்தில் தேய்த்துக்கொள்ளுமாறு கற்றுக்கொடுத்தார்கள். இதை கூறிவிட்டு அன்சாரிப்பெண்கள் நல்லவர்கள் மார்க்க விஷயத்தில் அவர்கள் வெட்கப்பட மாட்டார்கள் என ஆயிஷா (ரலி) கூறினார்கள்
(புஹாரி, முஸ்லீம்)