Home / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-4)

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-4)

நான்காவது படிப்பினை
நபிமார்கள் தாஇகள் மக்களுக்கு நல்லவற்றைப் போதிப்போர் ஆகியோரை பூமிவாழ் ஊர்வனங்கள் அவர்களது பெயர் மற்றும் தன்மைகளுடன் அறிந்து வைத்திருக்கின்றன.
{سُلَيْمَانُ وَجُنُودُهُ}  ﴿النمل٢٧: ١٨﴾

சுலைமானும் அவரது பரிவாரங்களும் (27:18)
அந்த எறும்பு சுலைமான் (அலை) அவர்களது பெயரையும்;; அவர் அரசன் என்பதையும் அறிந்து வைத்திருந்தது. அதே நேரத்தில் ஹுத்ஹுத் என்ற பறவை பல்கீஸ் ராணியைப் பெயரைக் கூறிக் குறிப்பிடாமல் வெறுமனே அவளை ஆட்சி புரியும் ஒரு பெண் என்றே குறிப்பிட்டது.
நபிமார்கள்,தாஇகள்,மக்களுக்கு நல்லவற்றைப் போதிப்போர் ஆகியோரைப் பூமியிலுள்ள ஊர்வனங்களும் கூட அறிகின்றன.
இக்கருத்தையே பின்வரும் ஹதீஸும் கூறுகிறது.
அபூ உமாமா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ்வும்,அவனது அமரர்களும்,விண்ணிலுள்ளோரும்,மண்ணிலுள்ளோரும்,புற்றிலுள்ள எறும்புகளும் மற்றும் மீன்கள் உட்பட அனைத்துமே மக்களுக்கு நலவைப் போதிப்போருக்காகப் பிரார்த்தனைப் புரிகின்றன.      (திர்மிதி:2609)
அல்லாஹ்தஆலாவும் சில நபிமார்களின் பெயர்களைக் குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான். உதாரணமாக ஸகரிய்யா (அலை) அவர்களுக்கு யஹ்யா (அலை) அவர்களைக் கொண்டு சுபச்செய்தி கூறுகையில் ((ஸகரிய்யாவே நாம் உமக்கு யஹ்யா என்ற பெயருடைய ஒர் பிள்ளையைக் கொண்டு சுபச்செய்தி சொல்கிறோம்.)) என்று கூறுகிறான். (மர்யம்:08)
அதே வேளையில் பாவிகளின் பெயர்களைக் குறிப்பிடுவதைத் தவிர்த்திருக்கிறான். நம்ரூத்,ஒட்டகத்தை அறுத்தவன் போன்றோரின் பெயரைக் குறிப்பிடவில்லை.
பிர்அவ்ன்,ஹாமான்,காரூன் போன்றோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பது ஏனையோருக்குப் படிப்பினைக்காகவே. அதே போன்று நபியவர்களும் சில பாவிகளின் பெயர்களைக் குறிப்பி;ட்டுள்ளார்கள்.
 இம்ரான் இப்னு ஹுஸைன் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபியவர்கள் ஒரு முறைத் தொழுகைகையப் பற்றிக் குறிப்பிடுகையில் யார் அதனைப் பேணிப் பாதுகாப்பாரோ அவருக்கு அது ஒளியாகவும்,அத்தாட்சியாகவும்,மறுமை நாளன்று பாதுகாப்பாகவும் ஆகிவிடும். யார் அதனைப் பேணிப் பாதுகாக்கவில்லையோ அவருக்கு அது ஒளியாகவோ,அத்தாட்சியாகவோ,பாதுகாப்பாகவோ இராது. மறுமை நாளில் அவன் காரூன்,பிர்அவ்ன்,ஹாமான்,உபய் அப்னு கலப் ஆகியோருடன் இருப்பான்.  (ஆதாரம்: அஹ்மத்:6288)

                                                                                                                                                                          தொடரும்……

Check Also

எழுச்சிக் கொண்ட சமூகம் : கல்வி-தாக்கம்-மாற்றம்

மீள் பதிவு: கல்வி ➡ தாக்கம் ➡ மாற்றம் ————————————————————– நாம் சீரான கல்வியைப்  பெற்று, தாக்கமும் அடைந்து, அறிவு …

Leave a Reply