Home / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-10)

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-10)

10வது படிப்பினை
உண்மையான, பூரணமான நன்றி நல்லமல்களின் மூலம் அல்லாஹ்வை நெருங்குவதேயாகும்.

{وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ} النمل: 19

நீ பொருந்திக் கொள்ளும் நல்லவற்றை நான் செய்வதற்கும் எனக்கு உதவிபுரியாக 27:19

உண்மையான, பூரணமான நன்றி நல்லமல்களின் மூலம் அல்லாஹ்வை நெருங்குவதன் மூலமே உண்டாகும், என்பதை சுலைமான் (அலை) உணர்ந்தார்கள். ஏனெனில் நன்றியென்பது மூன்று வகைப்படும்.
1.                  மனமார்ந்த நன்றி:உள்ளத்தில் அல்லாஹ்வின் மகத்துவம், நேசம் உண்டாவதும், அனைத்துப் பாக்கியங்களும் அவன் புறத்திலிருந்தே என்பதை உறுதிகொள்வதுமாகும்.
2.                  நாவின் நன்றி: அல்லாஹ்வைப் புகழ்ந்து துதிசெய்வது.
3.                  உறுப்புக்களின் நன்றி:அனைத்து உறுப்புக்களையும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றுத் தரும் நற்காரியங்களில் ஈடுபடுத்தல்.
((தாவூதுடைய குடும்பமே! நன்றி செலுத்துமுகமாக அமல் செய்வீர்களாக)) என அல்லாஹ் அருளிய போது சுலைமான் (அலை) அவர்கள் அல்லாஹ்விடத்தில் அவனுக்கு விருப்பமான அமல்களைச் செய்ய தௌபீக் வழங்குமாறு வேண்டினார்கள்.
நபி (ஸல்) அவர்களும் தமது பாதங்கள் வீங்குமளவிற்கு நின்று வணங்குவார்கள். அப்பொழுது ஆயிஷா (ரழி) அவர்கள் (அல்லாஹ்வின் தூதரே! உங்களது முன்பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்திருக்கும் நிலையில் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?) என்றார்கள். அதற்கு நபியவர்கள் ((நான் நன்றி செலுத்தும் அடியானாக இருக்கக் கூடாதா!)) என்றார்கள் (புஹாரி:446)
நல்லமல்கள் செய்வதற்குரிய பாக்கியமும் அல்லாஹ்வின் புறத்திலிருந்தே என்பதனால் அவனிடத்திலேயே அதற்கான உதவியையும் வேண்டினார்கள்.
இன்னும் ஒரு முஸ்லிம் தன் நற்கருமங்களின் மூலம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் தவிர வேறெதனையும் எதிர்ப்பார்க்கலாகாது. அதனைப் பெறுவதே நல்லோர்களின் இலக்கும், கண் குளிர்ச்சியுமாகும்.
தொடரும்……

Check Also

அமானிதம் | ஜும்ஆ தமிழாக்கம் | Asshiek Abdullah Uwais Meezani |

அமானிதம் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 06 – 12 – …

Leave a Reply