ஃபிக்ஹ் பாகம் – 2
உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள்
ஆழ்ந்த தூக்கம் :
சப்வான் இப்னு அஸ்ஸான்(ரலி) – நபி(ஸல்) – நாங்கள் பிரயாணத்திலிருந்ததால் 3 நாட்களுக்கு காலுறைகளை கழட்ட வேண்டாம் என்றும் குளிப்பு கடமையானால் கழட்ட வேண்டுமென்றும் மலஜலம் கழித்தாலோ தூங்கினாலோ காலுறையை கழட்ட தேவையில்லை என்று கட்டளையிட்டார்கள், (அஹ்மத், நஸயீ, திர்மிதி – ஸஹீஹ்)
❈ இந்த ஹதீஸின் மூலம் தூங்கினால் உளூ முறியும் என்றும் நாம் புரிந்து கொள்ளலாம்.
❈ அனஸ் (ரலி) – நபித்தோழர்கள் இஷா தொழுகைக்கு பள்ளிக்கு வருவார்கள் அப்போது நபி(ஸல்) தொழுவிக்க வரும் வரை தலைகள் சாய்ந்து போகும் வரை தூங்குவார்கள் பிறகு உளூ செய்யாமல் தொழுவார்கள். ( முஸ்லீம், ஸுனன் அபூதாவூத், திர்மிதி)
❈ ஷுஹபா (ரலி) – நபி (ஸல்) வின் தோழர்கள் தொழுகைக்காக எழுப்பப்படுவார்கள் அவர்கள் குறட்டை சத்தத்தை நான் கேட்டிருக்கிறேன் எழுந்து உளூ செய்யாமல் தொழுதார்கள்.
❈ இப்னுல் முபாரக் (ரஹ்) கருத்து : அவர்கள் உட்கார்ந்து தூங்கினார்கள் என்று நாங்கள் இதை புரிந்துகொள்கிறோம் என்றார்கள்.