ஃபிக்ஹ்
உளூவின் பர்ளுகள் பாகம் – 1
❤ ஸூரத்துல் மாயிதா 5:6
முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்)………
❖ இதன் மூலம் தொழுவதற்கு முன் உளூ செய்வது கடமை என்பதை நாம் அறிகிறோம்.
❖ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – உங்களில் ஒருவருக்கு சிறு தொடக்கு ஏற்பட்டு விட்டால் உளூ செய்யும் வரை தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது. (புஹாரி, முஸ்லீம்)