உசூலுல் ஹதீஸ்
பாகம்-6
நபி (ஸல்) அனுப்பிய தூதுவர்களும் நபி (ஸல்) வை நோக்கி வந்த தூதுவர்களும், மார்க்கத்தை பரப்புவதில் அவர்களுக்குரிய பங்கு
ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு பின்னர் நபி (ஸல்) பல அரசர்களுக்கு கடிதம் எழுதினார்கள். தங்களுடைய தூதுவர்களை (மார்க்க அறிவுள்ள) பல கோத்திரத்தினரை நோக்கி அனுப்பினார்கள்.
(உதாரணம்: அரபு தீபகற்பத்தில் உள்ள கோத்திரத்தினரிடமெல்லாம் தூதுவர்களை அனுப்பினார்கள்)
அவ்வாறு அனுப்பும்போது நபி (ஸல்) சில உபதேசங்களை செய்து அனுப்புவார்கள்.
(உதாரணம்: முஆத் இப்னு ஜபல் (ரலி) வை எமன் நாட்டிற்கு அனுப்பும்போது செய்த உபதேசங்களை நாம் அறிவோம்)
இன்னும் சில கூட்டங்கள் அவர்கள் இஸ்லாத்திற்கு வந்ததற்குப் பிறகு தூதுவர்களை நபி (ஸல்) விடம் அனுப்பி மார்க்கத்தை தெரிந்து விட்டு வரச்சொல்லுவார்கள்.
அதிகமான தூதுவர்கள் வந்த வருடம் ஹிஜ்ரி 9 என்று கூறப்படுகிறது.