உசூலுல் ஹதீஸ்
பாகம்-4
1.
2.
ஹதீஸுகளை கேட்பதிலும் பரப்புவதில் ஸஹாபி பெண்களின் பங்களிப்பு
நபி (ஸல்) பெருநாள் திடலில் பெண்கள் பக்கம் தனியாக போய் பிரசங்கம் செய்தார்கள்.
பெண்கள் தங்களுக்கென ஒரு நாளில் கல்வி கற்பிக்குமாறு நபி (ஸல்) விடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நபி (ஸல்) பெண்களுக்கு தனியாக கல்வி கற்றுக்கொடுத்தார்கள்
தனிப்பட்ட முறையில் சில ஸஹாபி பெண்கள் நேரடியாக நபி (ஸல்) விடம் வந்து கேட்டு தெரிந்து கொண்டார்கள் அல்லது ஆயிஷா (ரலி) மூலமாக கேட்டு தெரிந்து கொண்டார்கள்.
ﻭﻗﺎﻟﺖ أم المؤمنين ﻋﺎﺋﺸﺔ رضي الله عنها: “ﻧِﻌﻢَ اﻟﻨﺴﺎءُ ﻧﺴﺎءُ اﻷﻧﺼﺎﺭ ﻟﻢ ﻳﻤﻨﻌﻬﻦ
اﻟﺤﻴﺎء ﺃﻥ ﻳﺘﻔﻘﻬﻦ ﻓﻲ اﻟﺪﻳﻦ
ஆயிஷா (ரலி) – பெண்களில் சிறந்த பெண்கள். அன்சாரி பெண்கள் மார்க்க விஷயங்களை தெரிந்து கொள்வதில் அவர்கள் வெட்கப்பட மாட்டார்கள்
நபி (ஸல்) வின் மனைவிமார்கள் மார்க்க விஷயங்களை பரப்பக்கூடியவர்களாக இருந்தார்கள் அதில் குறிப்பாக ஆயிஷா (ரலி) புத்தி கூர்மையுடவர்களாகவும் இருந்தார்கள்.
இப்னு அபீ முலைக்கா (ரலி) – ஆயிஷா (ரலி) நபி (ஸல்) விடம் பல விவரங்களை தெளிவாக கேட்டறிந்தவர்களாக இருந்தார்கள்.
உதாரணம்:
صحيح البخاري برقم 103 : حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: أَخْبَرَنَا نَافِعُ بْنُ
عُمَرَ، قَالَ: حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
: كَانَتْ لاَ تَسْمَعُ شَيْئًا لاَ تَعْرِفُهُ، إِلَّا رَاجَعَتْ فِيهِ حَتَّى تَعْرِفَهُ، وَأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ حُوسِبَ عُذِّبَ» قَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ أَوَلَيْسَ يَقُولُ اللَّهُ تَعَالَى:
{فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا} [الانشقاق: 8] قَالَتْ: فَقَالَ: ” إِنَّمَا ذَلِكِ العَرْضُ،
وَلَكِنْ: مَنْ نُوقِشَ الحِسَابَ يَهْلِكْ “
நபி (ஸல்) – மறுமையில் விசாரணைக்கு உட்படுபவர், வேதனை செய்யப்படுவார். அப்போது ஆயிஷா (ரலி) 84:8. ஓலையை வலது கரத்தில் வழங்கப்பட்டவன், சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான். என்று அல்லாஹ் குர்ஆனில் கூறவில்லையா என்று கேட்டார்கள் – அப்போது நபி (ஸல்) – அது விசாரணை அல்ல ; அது(நான் சொல்வது) ஒரு முஸ்லிமுடைய பாவங்கள் எடுத்துக்காட்டப்படும் .(அதன் மூலம் , அல்லாஹ் அவரது பாவத்தை மறைத்து, மன்னித்துள்ளான் என்பதை அறிந்துகொள்வான்) அணுஅணுவாக யார் கேள்வி கேட்கப்படுகிறாரோ மறுமை நாளில் அவர் வேதனைக்கு உள்ளாக்கப்படுவார் என்று சொன்னார்கள்;(புஹாரி : 103
இது போல ஆயிஷா(ரலி) ஒவ்வொரு விஷயத்தையும் நபி(ஸல்) விடம் தெளிவாக கேட்டு அறியகூடியவர்களாக இருந்தார்கள்.