உசூலுல் ஹதீஸ்
பாகம்-31
அல் காஃபீ யும் அல் புஹாரியும்
அல் காஃபீ என்ற ஷியாக்களின் ஹதீஸ் கிரந்தத்திற்கும் ஸஹீஹ் புஹாரிக்கும் எந்த அடிப்படையிலும் நிகராக முடியாது.
இமாம் புஹாரி அவர்கள் அறிவிப்பாளர் தொடர் தொடர்ச்சியாக வருகிறதா, அறிவிப்பாளருக்கு மனன சக்தி இருக்கிறதா, போன்ற பல ஆய்வுகளை செய்து ஹதீஸுகளை அமானிதமான முறையில் மக்களிடம் ஒப்படைத்தார்கள். ஆனால் இது போன்ற எந்த ஒரு அடிப்படையையும் எடுத்துக்கொள்ளாமல் எழுதப்பட்ட நூல் தான் காஃபீ.
அல் காஃபீ யில் இடம்பெறும் முதல் ஹதீஸே பொய்யான ஹதீஸாகும். பகுத்தறிவைப்பற்றி வரக்கூடிய அனைத்து ஹதீஸ்களும் பொய்யான ஹதீஸ்களாக இருக்கும் நிலையில் அந்த புத்தகத்தில் முதல் பாடமே அதுவாக தான் இருக்கிறது. ஏனெனில் இந்த புத்தகம் பிற்காலத்தில் தான் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.