உசூலுல் ஹதீஸ்
பாகம்-3
❀ ஒரு ஸஹாபியை தான் முஸ்லிமாக இருக்கும்போது சந்தித்து முஸ்லிமான நிலையிலேயே மரணித்தவரை நாம் “தாபிஈ” என்போம்.
❀ தாபியீன்களை இஸ்லாமிய அறிஞர்கள் பல படித்தரங்களாக பிரித்துள்ளார்கள்.
- இமாம் முஸ்லிம், 3 (தபகா)படித்தரமாக தரப்படித்தியுள்ளார்
- இமாம் இப்னு ஸஃத் 4 படித்தரதரமாக தரப்படித்தியுள்ளார்
- இமாம் ஹாகிம் 15 தபகாவாக தரப்படித்தியுள்ளார்
முதலாவது படித்தரமாக – சுவர்க்கத்தை கொண்டு நன்மாராயம் கூறப்பட்ட 10 ஸஹாபாக்களை சந்தித்தவர்கள்
❀ இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி – தக்ரீபுத் தஹ்தீப் என்ற நூலில், தாபிஈன்களை நான்காக தரம்பிரித்துள்ளார்கள் :
(1) மூத்த தாபிஈன்கள்
உதாரணம் : ஸஈத் பின் முஸையப்
(2) நடுத்தரமான தாபிஈன்கள்
உதாரணம் : ஹஸன் அல்பஸ்ரி , முஹம்மத் பின் ஸீரீன்
(3) சில ஸஹாபாக்களை சந்தித்திருந்தாலும், அவர்கள் ஹதீஸ்களை பெரும்பாலும் தாபிஈன்கள் ஊடாகவே பெற்றிருப்பார்கள் .
உதாரணம் : (இமாம் ஸுZஹ்ரீ, கதாதஹ்)
(4) இளமையான தாபிஈன்கள் : 2 அல்லது 3 ஸஹாபாக்களை கண்டிருப்பார்கள் ஆனால் ஸஹாபாக்களிடமிருந்து ஹதீஸ்களை பெற்றிருக்க மாட்டார்கள்.
உதாரணம் : அல் அஃமஷ்
❀ முகல்றம் (المخضرم)وهو الذي أدرك الجاهلية وزمن النبي – صلى الله عليه وسلم – وأسلم ولم يره ) ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்து , இஸ்லாத்தை தழுவியவர்; ஆனால் நபி (ஸல்) அவர்களை சந்திக்காதவர். (இரண்டு தலைமுறையிலும்(ஜாஹிலிய்யா+இஸ்லாம்) இருந்தவர்கள்)
உதாரணம் : அபூ உத்மான் அன்னஹ்தி .
ஏழு சட்ட நிபுணர்கள் – الفقهاء السبعة
ومن أكابر التابعين الفقهاء السبعة سعيد بن المسيب ، والقاسم بن محمد،وعروة
ببن الزبير، وخارجة بن زيد ، وأبو سلمة بن عبد الرحمن ، وعبيد الله بن عبد
الله بن عتبة ، وسليمان بن يسار
- ஸயீத் இப்னு முஸய்யப்
- காசிம் இப்னு முஹம்மத்
- உர்வா இப்னு ஸுபைர்
- ஹாரிஜத இப்னு ஸய்த்
- அபூ ஸலமஃ இப்னு அப்திர் ரஹ்மான்
- உபைதுல்லாஹ் இப்னு அப்துல்லாஹ்
- ஸுலைமான் இப்னு யஸார்
❀ தாபிஈன்களில், இவர்களின் கருத்துகளுக்கு தனிமரியாதை உண்டு .
தாபிஈன்களில் சிறந்தவர் யார்
மக்கள் , தங்கள் நகரங்களில் வாழும் இமாம்களை மேன்மைப்படுத்துவர்
உதாரணம் :
– மதீனாவில் – ஸயீத் இப்னு முஸய்யப்
– கூபாவில் – உவைஸ் அல் கர்ணீ
(இவரைப்பற்றிய அறிவிப்புகள் ஸஹீஹ்முஸ்லிமில் பதியப்பட்டுள்ளன. ஆனால் அவை சர்ச்சைக்குரியன)
– பஸ்ராவில் – ஹஸனுல் பஸ்ரி
சிறந்த பெண் தாபியிய்யாக்கள் (التابعيات)
- ஹப்ஸா பின்த் ஸீரீன்
- அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான்
- உம்மு தர்தா
خير القرون قرني، ثم الذين يلونهم ثم الذين يلونهم
❀ நபி (ஸல்) அவர்கள், “நூற்றாண்டுகளில் சிறந்தது , எனது நூற்றாண்டு ஆகும் . பின்பு அவர்களை அடுத்துவருபவர்கள் . பின்பு அவர்களை அடுத்துவருபவர்கள் “ என்று கூறினார்கள் .
எனது நூற்றாண்டு என்பது ஸஹாபாக்கள் . அவர்களை அடுத்துவருபவர்கள் ,தாபிஈன்கள் . அவர்களை அடுத்துவருபவர்கள், தாபிஈன்களை பின்பற்றியவர்கள் .
ஸஹாபாக்களையும் தாபிஈன்களையும் ஏன் அறிந்து கொள்ள வேண்டும் ?
இவர்களை அறிந்தால் தான் ஹதீஸ் ஸஹீஹானதா இல்லையா என்று நாம் தெரிந்து கொள்ள முடியும். அறிவிப்பாளர் தொடரில் ஏற்படும், இடைவெளிகளையும் அறிய முடியும்.