உசூலுல் ஹதீஸ்
பாகம்-22
இதன் காரணமாக ஈராக் வாசிகளுக்கு ஷாம் வாசிகளுக்கும் இடையில்; அலீ (ரலி) அவர்களும் முஆவியா (ரலி) வும் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார்கள். இந்த 2 பிரிவினரும் சில காலத்திற்கு பிறகு ஷாமிற்கும், ஈராக்கிற்கும் நடுவில் ஒரு பகுதியில் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்ற ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த 2 பிரிவினரும் ஸிஃபீன் என்ற இடத்திலிருந்து பிரிந்து சென்றார்கள்.
முஆவியா (ரலி) ஷாமிற்கு திரும்பி; அலீ (ரலி) ஈராக்கிற்கும் சென்ற அந்த நேரத்தில் ஹவாரிஜுகளை சேர்ந்த குர்ஆ (எண்ணிக்கையில் அவர்கள் ஏறத்தாழ 6000 என்றும் 8000 என்றும் கூறப்படுகிறது) என்ற அந்த பகுதியினர் அலீ (ரலி) செய்தது மிகப்பெரும் தவறு; அவர் நடுவர் தீர்ப்புக்கு இணங்கியிருக்க கூடாது அதன் மூலமாக அவர் மாபெரும் தவறிழைத்துவிட்டார் என்று ஆட்சேபம் தெரிவித்து ஹரூரா என்ற இடத்தில் தங்கியிருந்தார்கள். அலீ (ரலி) அவர்கள் செய்யப்பட அந்த ஒப்பந்தத்திலிருந்து பின் வாங்கி விட்டார்கள் என்றும் செய்தியை பரப்பி விட்டார்கள். அவர்களுடைய தலைவர் அப்துல்லாஹ் இப்னு கவா என்பவன் ஆவான்.
ஆதலால் அலீ (ரலி) மிம்பரில் ஏறி நான் அந்த உடன்படிக்கையை முறிக்கவில்லை என்று மக்களுக்கு விளக்கமளித்தார். உடனே ஹவாரிஜுகள் لا حكم الا لله (அல்லாஹ்வின் சட்டத்தை தவிர வேறு சட்டம் இல்லையென்று கோஷமிட்டார்கள்)
அப்போது அலீ (ரலி) அல்லாஹ்வின் சட்டத்தை தவிர வேறு சட்டம் இல்லை என்பது உண்மை தான் ஆனால் உங்கள் நோக்கம் பாத்திலானது(தவறானது) என்று கூறினார்கள்.
ஆகவே அந்த ஹவாரிஜுகளிடம் அலீ (ரலி) “உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் இனி கருத்தொற்றுமை இல்லை எங்கள் பள்ளிக்கு உங்கள் மக்கள் வருவதை நாங்கள் தடுக்க மாட்டோம் யுத்தத்தில் வரக்கூடிய வருமானங்களை தடுக்க மாட்டோம் உங்களுடன் யுத்தத்தை நாங்களாக ஆரம்பிக்க மாட்டோம் ஆனால் நீங்களாக ஆரம்பித்தால் நாங்கள் உங்கள் மீது நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினார்கள்.
பிறகு ஹவாரிஜுகள் மதாயின் என்ற இடத்தில ஒன்று சேர்ந்தார்கள். அப்போது அவர்களுக்கு அலீ (ரலி) கடிதம் அனுப்பி பெரும்பான்மை சமுதாயத்துடன் இணையுமாறு கேட்டுக்கொண்ட போது அவர்கள் “நீங்கள் நடுவர் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு காஃபிராகிவிட்டதால் அதற்காக தவ்பா செய்தால் மட்டுமே நாங்கள் உங்களை ஏற்றுக்கொள்வோம்”என பதிலளித்தார்கள். பிறகும் அலீ (ரலி) தூதுவரை அனுப்பியபோது அந்த தூதரையும் கொல்வதற்கு முயற்சித்தார்கள் ஹவாரிஜுகள்.
மேலும் அவர்கள் கூறினார்கள் “எங்கள் கொள்கையை யார் நம்பவில்லையோ அவர்கள் காஃபிராகி விடுவார்கள். அவர்களது இரத்தம் எங்களுக்கு ஹலால், சொத்துக்கள் எங்களுக்கு ஹலால், அவர்களுடைய குடும்பம் எங்களுக்கு ஹலால் என்று கூறினார்கள். இதை சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் செய்தும் காட்டினார்கள். அவர்களை ஏற்காதவர்களை கொன்றார்கள்.
Assalamu alaikum
Na ΔL islah la padikiren eanaku subjects pdf form la anupa mudiuma pls
Imeges downlode kooda pannnna mudiyala