Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / இறைவன் கேட்கும் சில கேள்விகள்19

இறைவன் கேட்கும் சில கேள்விகள்19

அகீதா

இறைவன் கேட்கும் சில கேள்விகள்!?

பாகம் – 19

ஸூரத்து யாஸீன் 36: 77 , 78 , 79 , 80 , 81

اَوَلَمْ يَرَ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ نُّطْفَةٍ فَاِذَا هُوَ خَصِيْمٌ مُّبِيْنٌ‏

(77) மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.

 நபி (ஸல்) விடம் ஒருவர் வந்து ஒரு எலும்பு துண்டை காண்பித்து இதை அல்லாஹ் உயிர்த்தெழ செய்வானா? என்று கேட்டபோது அல்லாஹ் கேட்கிறான்

وَضَرَبَ لَـنَا مَثَلًا وَّ نَسِىَ خَلْقَهٗ‌ ؕ قَالَ مَنْ يُّحْىِ الْعِظَامَ وَهِىَ رَمِيْمٌ‏

(78) மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று.

قُلْ يُحْيِيْهَا الَّذِىْۤ اَنْشَاَهَاۤ اَوَّلَ مَرَّةٍ‌ ؕ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيْمُ ۙ‏

(79) “முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!

اۨلَّذِىْ جَعَلَ لَـكُمْ مِّنَ الشَّجَرِ الْاَخْضَرِ نَارًا فَاِذَاۤ اَنْـتُمْ مِّنْهُ تُوْقِدُوْنَ‏

(80) “பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே; அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள்.

اَوَلَيْسَ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِقٰدِرٍ عَلٰٓى اَنْ يَّخْلُقَ مِثْلَهُمْؔؕ بَلٰی وَهُوَ الْخَـلّٰقُ

الْعَلِيْمُ‏

(81) வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்.

பனீ இஸ்ராயீல் 17: 49 , 50 , 51 ,

وَقَالُوْۤا ءَاِذَا كُنَّا عِظَامًا وَّرُفَاتًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ خَلْقًا جَدِيْدًا‏

(49) இன்னும:; “(இறந்து பட்டு) எலும்புகளாகவும், உக்கிப்போனவைகளாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு, நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்களா?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.

قُلْ كُوْنُوْا حِجَارَةً اَوْ حَدِيْدًا‏

(50) (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகுங்கள்.

اَوْ خَلْقًا مِّمَّا يَكْبُرُ فِىْ صُدُوْرِكُمْ‌ۚ فَسَيَـقُوْلُوْنَ مَنْ يُّعِيْدُنَا‌ ؕ قُلِ الَّذِىْ فَطَرَكُمْ اَوَّلَ مَرَّةٍ‌ ۚ

فَسَيُنْغِضُوْنَ اِلَيْكَ رُءُوْسَهُمْ وَيَقُوْلُوْنَ مَتٰى هُوَ‌ ؕ قُلْ عَسٰٓى اَنْ يَّكُوْنَ قَرِيْبًا‏

(51) “அல்லது மிகப் பெரிதென உங்கள் நெஞ்சங்களில் தோன்றும் வேறொரு படைப்பாய் ஆகுங்கள்;” (எப்படியானாலும் நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்). “எங்களை எவன் (மறுமுறையும் உயிர் கொடுத்து) மீட்டுவான்?” என்று அவர்கள் கேட்பார்கள். “உங்களை எவன் முதலில் படைத்தானோ, அவன் தான்!” என்று (நபியே!) நீர் கூறும்; அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)? என்று கேட்பார்கள். “அது வெகு சீக்கிரத்தில் ஏற்படலாம்” என்று கூறுவீராக!

ஸூரத்துந் நாஜிஆத் 79: 43 , 44

فِيْمَ اَنْتَ مِنْ ذِكْرٰٮهَاؕ‏

(43)அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?

اِلٰى رَبِّكَ مُنْتَهٰٮهَاؕ‏

(44)அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply