அகீதா
இறைவன் கேட்கும் சில கேள்விகள்!?
பாகம் – 14
இஸ்லாம் இயற்கை மனநிலைக்கு ஒப்பான மார்க்கமாகவே இருக்கிறது:
♻ தந்தையின் வீட்டை விட்டும் தொழிலை விட்டும் பாரம்பரியத்தை விட்டும் மாறும் மனிதனுக்கு தந்தையின் கொள்கைக்கு மாற்றமாக செல்வதற்கு என்ன தடை?
🔶 ஸூரத்துல் பகரா 2:170
▶ மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?
இறைவன் நம் உள்ளத்தை தான் பார்க்கிறான்.
♻ ஆதாரம் : மகிழ்ச்சியின் உச்சகட்டத்தில்,”நீ என் அடிமை நான் உன் இறைவன் “என்று கூறிய மனிதனை அல்லாஹ் குற்றம் பிடிக்கவில்லை, ஏனெனில் அவன் உள்ளம் மாறவில்லை.
🔶 ஸூரத்துந் நஹ்ல் 16:106
▶எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) – அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர – (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய உள்ளம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ – இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.
♻ இஸ்லாத்திற்குள் நுழைவதற்கு ஒரு நாளும் அறிவு தடையாக இருப்பதில்லை மாறாக தடையாக இருப்பது பொருளாதாரம், கலாச்சாரம், குடும்பம் போன்ற உலக விஷயங்கள் மட்டுமே