Home / இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ / இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 03 | மௌலவி ஷுஐப் உமரி |

இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 03 | மௌலவி ஷுஐப் உமரி |

ஆதாரபூர்வமற்ற செய்திகள்
01/03

தொகுப்பு :இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ்

மொழிபெயர்ப்பு : ஷுஐப் உமரி

மனிதர்களின் உறுதி மலைகளையும் தகர்த்து விடும்…

இது ஹதீஸ் இல்லை. இமாம் இஸ்மாயில் அல்அஜலூனி தனது “கஷ்புல் خகபா” வில் :
“இதை ஒரு ஹதீஸாக நான் அறியவில்லை. அஹ்மத் கஸ்ஸாலி, இது நபியவர்களுடைய கூற்று என்று கூறியதாக சிலர் கூறுகின்றனர். ஆராய்ந்து பார்க்க வேண்டும்” என்கிறார்.

ஹதீஸ் கிரந்தங்களில் நாமும் ஆராய்ந்த வகையில் எங்கும் கிடைக்கவில்லை. அஹ்மத் கஸ்ஸாலி தனது சகோதரர் முஹம்மத் கஸ்ஸாலியைப் போன்ற ஒரு சூபித்துவ சிந்தனையுள்ள, சட்டக் கலை அறிஞரே தவிர ஹதீஸ் கலை அறிஞரல்ல. எனவே அவர் சொல்வதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

முஹம்மத் கஸ்ஸாலி தனது இஹ்யாவில் நபியவர்கள் கூறியதாக பதிந்துள்ள அநேகமான செய்திகள் ஹாபிழ் இராகீ போன்றவர்களால் “அடிப்படையற்றவை” என்று விமர்சனத்திற்கு உட்பட்டவையாகும்.

தொடரும் இன்ஷா அல்லாஹ்…

Check Also

இமாம் அஹ்மதின் “முஸ்னத்” பற்றிய சுருக்கமான பார்வை…

(ஹதீஸ் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு) உங்களது தந்தை (இமாமுஸ் ஸுன்னா இமாமுனா அஹ்மத்) அவர்கள் பத்து இலட்சம் ஹதீஸ்களை மனனம் செய்திருந்தார்கள் …

Leave a Reply