Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 103

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 103

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 103

வணங்கப்படுபவர்களிடம் அல்லாஹ் மறுமையில் கேள்வி கேட்பான்

🌹 ஸூரா அல்மாயிதா 5:116

وَاِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ ءَاَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُوْنِىْ وَاُمِّىَ اِلٰهَيْنِ مِنْ دُوْنِ اللّٰهِ‌ؕ

قَالَ سُبْحٰنَكَ مَا يَكُوْنُ لِىْۤ اَنْ اَقُوْلَ مَا لَـيْسَ لِىْ بِحَقٍّ‌ؕؔ اِنْ كُنْتُ قُلْتُهٗ فَقَدْ عَلِمْتَهٗ‌ؕ تَعْلَمُ مَا

فِىْ نَفْسِىْ وَلَاۤ اَعْلَمُ مَا فِىْ نَفْسِكَ‌ؕ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ‏

இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார்.

ஜுரைஜ் அவர்கள் ஒரு குழந்தையிடம் பேசச்சொன்ன போது அது பேசியது

⚜ நெருப்பு குண்டத்தில் வீசப்பட்டு இருந்த குழந்தை பேசியது

⚜ மக்காவில் கைதுசெய்யப்பட்ட ஸஹாபியின் கையில் மக்காவிலேயே கிடைக்காத பேரீத்தம் பழங்களை அல்லாஹ் இறக்கி வைத்திருந்தான்.

⚜ எந்த ஒரு நல்ல மனிதனும்; தனக்கு இறைவனிடமிருந்து வரும் அற்புதங்களை வெளிப்படுத்தி பிறரை வழி கெடுக்க விரும்ப மாட்டான்.

⚜ ஒரு மனிதருக்கு தெரிந்து எந்த ஒரு அற்புதமும் நடக்கும் என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply