அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 102
இறைநேசர்கள் கராமத் (அற்புதம்)
குகைவாசிகளுக்கு அல்லாஹ் பல அற்புதங்களை செய்தான் ஆனால் அதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
ஆனால் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு மேலாக மக்கள் பள்ளி எழுப்பினார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த அற்புதங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை ஆனால் பிறர் அறிந்து கொண்டனர்
ஸூரா அல் கஹ்ஃப் 18 : 21
இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றிய (விஷயத்)தை வெளியாக்கினோம்; (அப்பட்டணவாசிகளோ) “இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை (நபியே! நினைவு கூறும்) “இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை(ப் பற்றி) இறைவனே நன்கறிவான் என்றனர்; இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்: “நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்” என்று கூறினார்கள்.