அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 51
7 – குர்ஆனை ஈமான் கொள்ளுதல் الايمان بالقرآن الكريم
பிற வேதங்களுக்கும் குர்ஆனுக்கும் உள்ள வித்தியாசங்கள்- இறுதியானது.
- பாதுகாக்கப்பட்ட வேதம்.
- இது உலக மக்கள் அனைவருக்கும் உரியது.
💠 ஆகவே பிற வேதங்களை நம்புதைபோலல்ல குர்ஆனை நம்புவது.
💠 கடந்தகால வேதங்களில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களுக்கு மாற்றமாக குர்ஆனில் ஒரு சட்டம் இருந்தால் அந்த பழைய சட்டம் மாற்றப்பட்டது என்று விளங்கிக்கொள்ள வேண்டும்.
🌺 ஸூரத்துல் ஃபுர்ஃகான் 25:1
تَبٰـرَكَ الَّذِىْ نَزَّلَ الْـفُرْقَانَ عَلٰى عَبْدِهٖ لِيَكُوْنَ لِلْعٰلَمِيْنَ نَذِيْرَا ۙ
உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.
🌺 ஸூரத்து யூஸுஃப் 12:3
(நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் – இதற்குமுன் (இது குறித்து) ஏதும் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர்.
(ஸூரத்துல் மாயிதா5:15, ஸூரத்துல் ஜுமுஆ62:2,ஸூரத்துல் ஹிஜ்ர்15:9)