அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 39
மலக்குல் மௌத்திற்கு இஜ்ராயீல்(عزرائيل) என்ற பெயர் ஆதாரமற்றதாகும்.
சூரா அஸ்ஸஜ்தா 32:11
قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ
“உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், “மலக்குல் மவ்து” தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் – பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.
இந்த வசனத்தின் மூலம் ஒவ்வொருவருக்கும் உயிரெடுப்பதற்கு ஒரு தனி மலக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.
முன்கர் நகீர் கபரில் விசாரிப்பவர்கள்.
ரகீப் அதீத் வலப்புறமும் இடப்புறமும் இருந்து நம்முடைய நன்மை தீமைகளை எழுதும் மலக்குகள்.
அது அவர்களின் தனிப்பட்ட பெயர்களா அல்லது அல்லாஹ்வால் நியமிக்க பட்ட அந்த குழுவின் பெயரா என்று நாம் அறியமுடியவில்லை.
சொர்க்கத்தின் காவலாளி மலக்கு ரிள்வான் என்ற பெயரில் கருத்துவேறுபாடு இருக்கிறது.
நரக காவலாளி மாலிக் என்பது குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.
இஸ்ராஃபீல் என்ற மலக்கின் பெயரை நாம் ஹதீஸில் காண்கிறோம்.