அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 132
அறிஞர்கள் விஷயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
- அவர்களை விரும்ப வேண்டும்
- அவர்களுடைய ரஹ்மத்துக்காக துஆ செய்ய வேண்டும்
- அவர்களுக்காக பாவமன்னிப்பு தேட வேண்டும்
قال رسول الله صلى الله عليه وسلم خير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين
يلونهم
♦️ இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) – நபி (ஸல்) – சமுதாயத்தில் சிறந்தவர்கள் என்னுடைய சமுதாயம் அதற்கு பின்னால் அவர்களை தொடர்ந்து வரக்கூடியவர்கள் பின்னர் அவர்களை தொடர்ந்து வரக்கூடியவர்கள்(புஹாரி)
ஸூரத்துல் ஹஷ்ர் 59:10 அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.
அவர்களைப்பற்றி நல்ல முறையில் பேச வேண்டும்.
இமாம் மாலிக், இமாம் ஷாஃபீ, இமாம் அஹ்மத், இமாம் அபூ ஹனீஃபா போன்ற இமாம்கள் குர்ஆன் சுன்னாவிலிருந்து அவர்களுக்கு கிடைத்த அறிவிலிருந்தே பேசினார்கள்.
அவர்களின் வழிகாட்டல்கள் குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். (தக்லீத்)கண்மூடித்தனமாக பின்பற்றல் அவர்களை மதிப்பதாக ஆகாது.
மார்க்க விஷயங்களில் அவர்களின் பிழைகளை சரியான முறையில் புரிந்து கொள்ளல்.