Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 130

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 130

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 130

4 – ஒவ்வொரு ஸஹாபிக்கும் தனி சிறப்புக்கள் உண்டு என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்

أنس بن مالك رضي الله عنه حدثهم أن النبي صلى الله عليه وسلم صعد أحدا وأبو

بكر وعمر وعثمان فرجف بهم فقال اثبت أحد فإنما عليك نبي وصديق وشهيدان

அனஸ் இப்னு மாலிக் (ரலி) – நபி (ஸல்) அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலி) உடன் உஹதில் இருந்தபோது உஹத் குலுங்கியது அப்போது நபி (ஸல்) அமைதியடை உஹதே உனக்கு மேல் ஒரு நபியும் ஒரு சித்தீக்கும் இரு ஷஹீதுகளும் இருக்கிறார்கள் என்றார்கள் (புஹாரி)

قال النبي صلى الله عليه وسلم لعلي أما ترضى أن تكون مني بمنزلة هارون من

موسى

🌺நபி (ஸல்) அலீ (ரலி) யிடம் மூஸாவுக்கு ஹாரூன் இருந்தது போல எனக்கு நீங்கள் இருக்க விரும்பவில்லையா என்று கேட்டார்கள் (புஹாரி)

🌺நபி (ஸல்) பாத்திமா (ரலி) யை சொர்க்கத்தின் பெண்களின் தலைவி என்று நபி (ஸல்) கூறினார்கள்.

وعن جابر – رضي الله عنه – قال : قال النبي – صلى الله عليه وسلم – : ” من

يأتيني بخبر القوم ؟ ” يوم الأحزاب . قال الزبير : أنا فقال النبي – صلى الله عليه

وسلم – : ” إن لكل نبي حواريا ، وحواري الزبير ” . متفق عليه .

🌺 நபி (ஸல்) – ஒவ்வொரு நபிக்கும் துணையாளர்கள் இருப்பார்கள் என்னுடைய துணையாளர் ஜுபைர் இப்னு அவ்வாம் என்று கூறினார்கள்.(புஹாரி, முஸ்லீம்)

اللهم أحبهما فإني أحبهما

🌺 நபி (ஸல்)  ஹசன் ஹுசைன் இந்த இருவரையும் நீ விரும்பு நான் இந்த இருவரையும் விரும்புகிறேன் என துஆ செய்தார்கள்

أن عبد الله رجل صالح

🌺 அப்துல்லாஹ் இப்னு உமர் ஒரு சிறந்த மனிதர் என நபி (ஸல்) கூறினார்கள் (புஹாரி)

🌺 நபி (ஸல்) – ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) வை நோக்கி நீங்கள் என்னுடைய சகோதரர் மேலும் எனது தோழர்

جعفر بن أبي طالب الهاشمي رضي الله عنه وقال له النبي صلى الله عليه وسلم

أشبهت خلقي وخلقي

🌺 நபி (ஸல்) ஜஃபர் இப்னு அபீ தாலிப் (ரலி) யை நோக்கி நீங்கள் என்னைபோன்றவர் என்னைப்போன்ற பண்புகளுடையவர் என்று கூறினார்கள்.

يا بلال حدثني بأرجى عمل عملته في الإسلام فإني سمعت دف نعليك بين يدي في

الجنة

🌺 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) பிலால் (ரலி) இடம் சொர்க்கத்தில் எனக்கு முன்னால் உங்கள் செருப்பின் ஓசையை கேட்டேன் என்றார்கள்.(புஹாரி)

🌺 ஸாலிம், அப்துல்லாஹ் இப்னு மசூத், உபை இப்னு கஹ்ப், முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹும் இவர்களை பார்த்து நபி (ஸல்) கூறினார்கள் இவர்கள் நால்வரிடமிருந்து குர்ஆனை கற்றுக்கொள்ளுங்கள் என்றார்கள்.

وفضل عائشة على النساء كفضل الثريد على سائر الطعام

🌺 அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி) – நபி (ஸல்) -தரீத் என்ற உணவு உணவுகளிலேயே சிறப்பு இருப்பதைப்போல பெண்களிலேயே ஆயிஷாவுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது (புஹாரி)

لو سلك الناس واديا أو شعبا وسلكت الأنصار واديا أو شعبا لسلكت وادي الأنصار

أو شعبهم

🌺 அனஸ் (ரலி) – நபி (ஸல்) – மனிதர்கள் அனைவரும் ஒரு பாதையில் சென்றால் அன்சாரிகள் ஒரு பாதையில் சென்றால் நான் அன்சாரிகளுடைய பாதையில் செல்வேன் (புஹாரி)

الأنصار شعار والناس دثار

🌺 நபி (ஸல்) – அன்சாரிகள் என்னுடைய உடலை ஒட்டிய ஆடை மக்கள் எனது மேலாடை (புஹாரி)

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply