அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 127
ஸஹாபாக்களை எவ்வாறு நேசிக்க வேண்டும்:
1 – அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவர்களை நேசிப்பதால் நாம் அவர்களை நேசிக்க வேண்டும்
ஸூரத்துல் மாயிதா 5:54
அவன் அவர்களை நேசிப்பான்; அவனை அவர்களும் நேசிப்பார்கள்; அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்; இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்; இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்; அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான்.
♦️ ஸஹாபாக்கள் அப்படி பட்டவர்களாக இருந்தார்கள்.
ஸூரத்துல் ஃபத்ஹ் 48:29
முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்;
عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” اللَّهَ اللَّهَ
فِي أَصْحَابِي ، اللَّهَ اللَّهَ فِي أَصْحَابِي ، لَا تَتَّخِذُوهُمْ غَرَضًا بَعْدِي ، فَمَنْ أَحَبَّهُمْ فَبِحُبِّي
أَحَبَّهُمْ ، وَمَنْ أَبْغَضَهُمْ ، فَبِبُغْضِي أَبْغَضَهُمْ ، وَمَنْ آذَاهُمْ فَقَدْ آذَانِي ، وَمَنْ آذَانِي فَقَدْ
آذَى اللَّهَ ، وَمَنْ آذَى اللَّهَ فَيُوشِكُ أَنْ يَأْخُذَهُ
நபி (ஸல்) – என்னுடைய தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள் எனக்கு பின்னால் அவர்களை நீங்கள் இலக்கு வைக்க வேண்டாம். யார் அவர்களை விரும்புகிறார்களோ எனது நேசத்தால் தான் அவர்களை நேசிக்கிறார்கள். யார் அவர்களை பகைக்கிறார்களோ என் மீது அன்பு கொண்ட என் தோழர்களை பகைக்கிறார்கள். அவர்களுக்கு யார் தொந்தரவுகளை கொடுக்கிறாரோ அவர் எனக்கு தொந்தரவு தருகிறார். எவர் எனக்கு தொந்தரவு தந்தாரோ அவர் அல்லாஹ்வுக்கு தொந்தரவு கொடுத்தவராவார்.எவர் அல்லாஹ்வுக்கு தொந்தரவு கொடுக்கிறாரோ அல்லாஹ் அவரை வெகு சீக்கிரமாக பிடிக்கக்கூடும்.
♦️ ஷியாக்கள் நபித்தோழர்களை அதிகமாக விமர்சிப்பவர்களாக இருக்கிறார்கள்.