Home / Classes (e-learning) / Dr. Abdur Rahim - இலக்கண பாடம் / Dr. Abdur Rahim – ஐந்தாவது பாடம்الدرس الخامس

Dr. Abdur Rahim – ஐந்தாவது பாடம்الدرس الخامس

 – ஐந்தாவது பாடம்الدرس الخامس
سَعِيْدٌ : أَكِتَابُ مُحَمَّدٍ هَذَا يَايَاسِرُ؟
சயீத் : முஹம்மதுடைய புத்தகமா இது, யாசிரே?
يَاسِرٌ : لَا, هذا كِتَابُ حَامِدٍ؟
யாசிர் : இல்லை, இது ஹாமித் உடைய புத்தகம்.
سَعِيْدٌ : أَيْنَ كِتَابُ مُحَمَّدٍ ؟
சயீத் :முஹம்மத் உடைய புத்தகம் எங்கே?
يَاسِرٌ : هُوَ عَلَى الْمَكْتَبِ هُنَاكَ.
யாசிர் : அது அங்கே மேஜையின் மீது ( இருக்கிறது )  
سَعِيْدٌ : أَيْنَ دَفْتَرُ عَمَّارٍ؟
சயீத் : அம்மாருடைய நோட் எங்கே?
يَاسِرٌ : هُوَ عَلَى مَكْتَبِ الْمُدَرِّسِ.
யாசிர் :அது ஆசிரியருடைய மேஜையின் மீது (உள்ளது)
سَعِيْدٌ : قَلَمُ مَنْ هَذَا يَا عَلِيُّ؟
சயீத் : அலியே, இது யாருடைய பேனா?
عَلِيٌّ : هَذَا قَلَمُ الْمُدَرِّسِ .
அலி : இது ஆசிரியருடைய பேனா.
سَعِيْدٌ : أَيْنَ حَقِيْبَةُ الْمُدَرِّسِ؟
சயீத் : ஆசிரியருடைய கைப்பை எங்கே?
علي : هِيَ تَحْتَ الْمَكْتَبِ
அலி : அது மேஜைக்கு கீழே (உள்ளது).
اِضَافَةٌمُضَافٌ – مُضَافُ اِلَيْهِ.
كِتَابُ مُحَمَّدٍ  
இரண்டு பெர்யர்ச்சொற்க்களுக்கு இடையில் உடைய என்ற அர்த்தம் வருமாயின் (அவனுடைய, இவனுடைய, தந்தையுடைய, அண்ணனுடைய) அது அரபியில் اِضَافَةٌஎனப்படும்.
உடையவரை (அந்த பொருளுக்கு அல்லது ஆளுக்கு சொந்தமானவரை) – مُضَافُ اِلَيْهِஎன்றும்,
உடைமையை (எந்த பொருள் அல்லது எந்த ஆள் அவருடைய உடைமையோ அவரை அல்லது அதை) مُضَافٌ என்றும் கூறுவோம்.
இந்த கலவையில் இரண்டு பெயர்ச்சொற்கள் இருக்கும். இதில் مُضَافٌ முதலாவதாகவும்,مُضَافُ اِلَيْهِ  இரண்டாவதாகவும் இடம்பெறும்.
இங்கு  كِتَابُவில் தன்வீன் மற்றும்الஇல்லை,எனவே இதை مُضَافٌஎன்று புரிந்து கொள்ளலாம்.
كِتَابُ مُحَمَّدٍ   முஹம்மதுடைய புத்தகம் –
كِتَابُ (مُضَافٌ)உடைமை –
مُحَمَّدٍ (مُضَافُ اِلَيْهِ ) உடைமையாளர் –
مضاف
ü  இதற்கு ஒருபோதும் ஆரம்பத்தில் அல் (ال) வராது.
ü  தன்வீனும் வராது.
ü  ஆனால் مرفوع, منصوب, مجرورபோன்ற எதுவாக வேண்டுமானாலும் இடத்திற்கேற்றார் போல வரும்.
مُضَافُ اِلَيْهِ
ü  இது எப்போதும் مجرورஆக தான் வரும்.
ü  இது definite ஆகவும், indefinite ஆகவும் வரலாம்.
ü  مُضَافُ   இயற்கையாக مرفوعஆக வரும்
உதாரணத்திற்கு كِتَابٌஅல்லது الكتابமற்றும் مُحَمَّدٌதனித்தனியாக இருக்கும்போது எந்த ஒரு மாறுதலுக்கும் உட்படாமல் இயற்கையாக இவ்வாறு வருகிறது.  இதை இப்போது  اضافةசெய்யும்போது மேற்கண்ட விதிகளை உபயோகிப்போம். அப்படியாயின் அது كِتَابُ مُحَمَّدٍ   (முஹம்மதுடைய புத்தகம்) என்று ஆவதை நாம் அறிந்து கொள்ளலாம்.
(உ.ம்) : அல்லாஹ் உடைய பெயர் اِسْمُ اللهِ
اِسْمُ – مُضَافُ (مرفوع)    
  اللهِمُضَافُ اِلَيْهِ (مجرور)
அல்லாஹ் உடைய பெயரைக் கொண்டுبِسْمِ اللهِ –
بِ – حَرْفُ الجَرٌّ
اِسْمِ – اِسْمُ مجرور و هو مُضَافُ
اللهِ – مُضَافُ اِلَيْهِ  
الْكِتَابُ مُحَمَّدٍ     ,    كِتَابُ مُحَمَّدٍ
  இவ்வாறு சொல்வது பிழை. ஏனெனில்  مُضَافُ க்கு ஒருபோது ال, தன்வீன்  வராது.
    مُضَافُdefinite ஆக்குவதற்கு ال, தன்வீனோ தேவை இல்லை. அதன் அமைப்பை பொருத்து அது definite அல்லது indefiniteஆக கணிக்கப்படும்.
   مُضَافُ اِلَيْهِ definite என்றால் مُضَافُ definiteஆக வரும்.
مُضَافُ اِلَيْهِindefinite என்றால் مُضَافُ indefiniteஆக வரும்.
அழைப்புக்குரிய இடைச்சொல்
يَا يَاسِرُ
இங்கு வரக்கூடிய   ياء النّدا) يَاஅழைப்புக்குரிய யா எனப்படும். இதை தொடர்ந்து வரக்கூடிய பெயரை مُنَادَى(அழைக்கப்பட்டவர் )என்பார்கள். இந்த ياء النّداவிற்கு பின்னால் வரக்கூடிய பெயருக்குஒரு தம்மாஹ்ُதான் வரும்மாறாக தன்வீன்   ٌவராது மேலும் பெயருடைய ஆரம்பத்தில் الஉம் வராது.

 ظَرْفٌ(adverb)   
           – அங்கே هناك 
இது ஒரு ظَرْفٌஆகும்.  ظَرْفٌஇருவகைப்படும்.
இடப்பெயர்   مَكَانٍظَرْفٌ
(Adverb of place)
காலப்பெயர் ظرف زَمَانِ
(Adverb of time)
ஒரு பெயர்ச்சொல் இடத்தைக் குறித்து வந்தால் அது مَكَانٍظَرْفٌ எனப்படும்.  (உ.ம்) அங்கே, இங்கே
ஒரு பெயர்ச்சொல் காலத்தைக் குறித்து வந்தால் அது ظرف زَمَانِ எனப்படும் (உ.ம்) காலை, மாலை, நேற்று, நாளை.
قَلَمُ مَنْ؟ – யாருடைய பேனா?
 இது ஒரு  مُضَافُ اِلَيْهِ ,مُضَافُ கலவை ஆகும். இங்கு உடைமை என்னும் அர்த்தம் வந்திருக்கிறது. قَلَمُ  – مُضَافُஆகவும், مَنْمُضَافُ اِلَيْهِஆகவும் உள்ளது.
கவனிக்கவும் :
   இங்கு مَنْ  மஜ்ரூரக  ஆக  அடையாளப்படுத்த படவில்லை. ஏனெனில் இது அடையாளப் படுத்த முடியாத சொல்லாகும். இது مَبْنِىஎனப்படும். அதன் அமைவிடத்தைப் பொருத்தும் இதன் அடையாளம் மாறாது.
(உ ம்)  – هذا இது எல்லா நிலைகளிலும்(مرفوع, منصوب, مجرور)هذا  தான். இது மாறாது.
هِيَ تَحْتَ الْمَكْتَبِ  – அது மேஜையின் கீழ் (உள்ளது)
تَحْتَகீழே
இங்குتَحْتَவை தொடர்ந்து வரக்கூடிய பெயர்ச்சொல் مجرور(ِ) ல் வந்துள்ளது. இது ஒரு ظَرْفٌ. இடத்தைக் குறித்து வருவதால்ظَرْفٌ مَكَانٍ எனப்படும். சில வேளைகளில்  ظَرْفٌ கள் مُضَافُஉடைய வேலையைச் செய்யும். ( ஆனால் அவை مُضَافُ  இல்லை ظَرْفٌஆக தான் இருக்கும்.) ஆகவே அதனைத் தொடர்ந்து مُضَافُ اِلَيْهِவரும். مجرور ல் வரும்.
هِيَ تَحْتَ الْمَكْتَبِ
هِيَ – مُبْتَدَأَ
تَحْتَ – ظَرْفٌ
الْمَكْتَبِ – مُضَافُ اِلَيْهِ
இங்குخبر  முடிவடையாத வாக்கியமாக வருகிறது. تَحْتَ  (கீழே) முடிவடையாத வாக்கியம் شِبْحُ جُمْلَة எனப்படும். இங்கு خبر, شِبْحُ جُمْلَةவாக வருகிறது.
شِبْحُ جُمْلَةஇரு வகைப்படும்
1.شِبْحُ جُمْلَة  جَارٌ وَمَجْرُوْرٌ
2.ظَرْفٌ شِبْحُ جُمْلَة  
   5خبر  வகைப்படும் என நாம் முன்பே அறிந்தது தான். அதில் 3 ஆவது வகை தான் இந்த
ظَرْفٌ شِبْحُ جُمْلَة.
هِيَ تَحْتَ الْمَكْتَبِ
هِيَ – مُبْتَدَأَ
تَحْتَ – ظَرْفٌ شِبْحُ جُمْلَة خبر
الْمَكْتَبِ – مُضَافُ اِلَيْهِ
குறிப்பு: எல்லா ظَرْفٌஇற்கும் مُضَافُ اِلَيْهِகிடையாது. (உ.ம்) هُنَاكَ
مُضَافُ اِلَيْهِஇரண்டு விடயங்களுக்கு வரும்.
1. مُضَافُஐ தொடர்ந்து.
2. ظَرْفٌஐ தொடர்ந்து. (சில சமயங்களில்)
 اِسْمٌ , اِبْنٌ என்ற சொற்கள் هَمْزَةُ الوَصْل உடன் ஆரம்பிக்கின்றன. هَمْزَةُ الوَصْلஐ பற்றிய சிறு குறிப்பை இங்கே பார்ப்போம். அரபு மொழியில் சுக்கூன்ْவைத்து எந்த ஒரு சொல்லையும் ஆரம்பிக்க அனுமதி இல்லை.ஆகவே எதாவது ஒரு வார்த்தை சுக்கூன் கொண்டு ஆரம்பிக்கப்ப்படுமாயின் அங்குஆரம்பத்தில்هَمْزَةُ الوَصْلஇடம் பெறும். ஆகவே இந்தهَمْزَةُ الوَصْلஆரம்பத்தில் வரும்போது உச்சரிக்கப்படும். இரண்டு சொற்களுக்கு இடையில் வந்தால் உச்சரிக்கப்பட மாட்டாது.
(உ.ம்)  :  
اِسْمُ الوَلَدُ بِلَالٌ , وَاسْمُ البِنْتِ اَمِنَةٌ
   اِبْنُ المُدَرٍّسِ طَبِيْبٌ وَابْنُ الاِمَامِ تَاجِرٌ
இங்கு உதாரணத்தில் இரண்டு அடிக்கோடு இட்டவை உச்சரிக்கப்படும். ஒரு கோடிட்டவை உச்சரிக்கப்படாது.
pg. no 31  ல் கீழ் உள்ள பயிற்சியும், pg.no 32 ல் உள்ள பயிற்சியையும் இதே அடிப்படையில் வாசித்து பழகவும்.
பயிற்சிகள்
1.       பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்.
2. முதல் வார்த்தையையும் இரண்டாம் வார்த்தையையும் مُضَافُ,مُضَافُ اِلَيْهِஆக இணைத்து எழுதவும்.
3. கடைசி எழுத்தை சரியாக உச்சரிக்கவும்.
4. கீழ்க்கண்டவற்றை படித்து اِعْرَابٌசெய்யவும்.
1. நாம் மூன்றாவது புத்தகத்தை அடையும் வரைகேள்விகளை இஹ்ராப் செய்ய மாட்டோம்.
2. الْقُرْأَنُ كِتَابُ اللهِ
الْقُرْأَنُمُبْتَدَأَ ,    خبر و هو مُضَافُ – كِتَابُ, اللهِمُضَافُ اِلَيْهِ
இங்குالْقُرْأَنُனைப் பற்றி சொல்ல வரும் செய்திكِتَابُஎன்பதாகும். ஆகவேكِتَابُ  இங்கு خبرஆகும்.
இங்குكِتَابُ اللهِஎன்பதுمُضَافُ,مُضَافُ اِلَيْهِகலவை ஆகும்.ஆகவேஇங்குكِتَابُ, خبر و هو مُضَافُஆகும்.
3. خرج المدرس من غرفة المدير
خرجفعل;   المدرسفاعل:         من  – حرف الجر :  
غرفةاسممجرور وهو مُضَافُ :         المديرمُضَافُ اِلَيْهِ
5. கோடிட்ட இடங்களை சரியான வார்த்தையை கொண்டு நிரப்பவும்.
6. கீழ்க்கண்டவற்றை சரி செய்யவும்.
7. கடைசி எழுத்தை சரியாக உச்சரிக்கவும்.
8. கீழ்க்கண்ட உதாரணத்தைப் புரிந்து கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்பவும்.
9. புதிய வார்த்தைகள்:
الرَّسُوْلُதூதர் ;   الْكَعْبَةُ  – அல்லாஹ் உடைய ஆலயம் ; الْاِسْمُ  – பெயர் ; الاِبْنُ மகன் ;   العَمُّ – தந்தையுடன் பிறந்தவர் ( ஆண் பாலில் இருந்தால் தந்தையுடன் பிறந்த ஆண் ( சித்தப்பா, பெரியப்பா) பெண்பால்( العمة(இருந்தால் தந்தையுடன் பிறந்த பெண் (மாமி அல்லது அத்தை)   ;
الخَالُ – தாயுடன் பிறந்த சகோதரர்( மாமா)(الخَالَةُதாயுடன் பிறந்த சகோதரி ( சித்தி, பெரியம்மா ) )  ; الحَقِيْبَةُ – கைப்பை ;السَّيَّارَةُ – வாகனம்; الشَّارِعِ – சாலை; مُغْلَقٌமூடப்பட்டது; تَحْتَ  – கீழே; هُنَاكَஅங்கே.     

Check Also

Dr. Abdur Rahim Arabic Book 2 lesson 1-இலக்கண பாடம் 1 (الدَّرْسُ الأَوَّل)

Dr. Abdur Rahim Arabic Book 2 – இலக்கண பாடம் 1 PDF Read Only / வாசிக்க …

Leave a Reply