“சிறிய ஹதீஸ்கள் வார்த்தைக்கு வார்த்தை மனனம் செய்வதற்காக” – ஹதிஸ் எண் 4
عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ:
سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الكَبَائِرِ
قَالَ: (الْإِشْرَاكُ بِاللهِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ، وَقَتْلُ النَّفْسِ، وَشَهَادَةُ الزُّورِ)
(صحيح البخاري- 2653)
நபி(ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, கொலை செய்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி). ஆதாரம் : புஹாரி 2653.
ஹதீஸ்கள் வார்த்தைக்கு வார்த்தை…
سُئِلَ
|
عَنْ الكَبَائِرِ
|
கேட்கப்பட்டது
|
பெரும் பாவங்கள் பற்றி
|
الْإِشْرَاكُ بِاللهِ
|
وَ
|
عُقُوقُ
|
الْوَالِدَيْنِ
|
அல்லாஹ்வுக்கு இணை வைப்பது
|
மேலும்
|
துன்பம் கொடுப்பது
|
பெற்றோர்கள்
|
شَهَادَةُ
|
الزُّورِ
|
|
சாட்சி
|
பொய்
|
ஹதிஸ் அறிவிப்பாளர்:
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபிகளாரின் பணியாளர் என்று அழைக்கப்பட்டார். ஹிஜ்ரத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் மதீனாவில் பிறந்த இவர் சிறு வயதிலேயே இஸ்லாத்தை ஏற்றார். நபிகளாரைத் தொட்டும் 2286 ஹதீஸ்களை அறிவித்தார். தனது 100 வது வயதைத் தாண்டிய பின்னர் ஹிஜ்ரி 93ம் ஆண்டு பஸ்ராவில் காலமானார்.
ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
1) மேற்கூறப்பட்ட பாவங்களில் ஈடுபடுவதனை இந்நபிமொழி வன்மையாக எச்சரிக்கை செய்கின்றது, ஏனெனில் அவை பெரும் பாவங்களில் உள்ளவையாகும்.
2) மேற்கூறிய பாவங்களில் ஈடுபடுவதனால் அடிப்படைக் கொள்கை, மார்க்கம், ஒழுக்கம் மற்றும் சமூகம் சார்ந்த சீர்கேடுகள் நிறையவே ஏற்படுகின்றன.
3) ஒரு மனிதன் பெரும் பாவங்களில் ஈடுபடுவனால் அவனுக்கும் அவனுடைய இரட்சகனுக்கும் இடையிலான தொடர்பும் அவன் குடும்பம் மற்றும் அவன் சார்ந்திருக்கும் சமூகத்திற்கிடையிலான தொடர்புகளும் சீரற்றுப் போய்விடுகின்றன. இவ்வுலகிலும் மறுமையிலும் அவன் சீர்கெட்டவனாக மாறிவிடுகின்றான். இறைவனிடத்தில் அவன் பாவமீட்சி பெற்றாலே அன்றி அவனை இறைவன் மன்னிக்க மாட்டான்.